Breaking News

சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம் முழு விவரம் kutralam boating

அட்மின் மீடியா
0

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் படகு குழாம் திறக்கப்பட்டு படகு சவாரி துவங்கப்பட்டு உள்ளது.



தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் ஆகும் அப்போது இங்குள்ள குற்றால மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்வார்கள் மேலும் குற்றாலத்தில் சீசன் வந்துவிட்டால் அங்கு அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் திறக்கப்பட்டு படகு சவாரி நடைபெறும். 

ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ண மடக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் துவங்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தற்போது 25 படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 5 துடுப்பு மூலம் இயக்கும் படகுகளும் மீதமுள்ள 20 பெடல் மூலம் இயக்கப்படும் படகுகளும் ஆகும்.

இரு நபர் மிதி படகுகளுக்கு 150 ரூபாயும் நான்கு நபர் படகுகளுக்கு 200 ரூபாயும் தனிநபர் துடுப்பு படகுக்கு 150 ரூபாயும் நான்கு நபர். படகுகளுக்கு 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback