ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பெயர்ந்து விழுந்தது! வைரல் வீடியோ Jammu Srinagar National Highway update NH 44
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால், ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பெயர்ந்து விழுந்தது!
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் ஜம்மு -ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
270 கிமீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையாகும்.
ஜம்மு ஸ்ரீநகரை இணைக்கும் இரண்டு சுரங்கபாதைகள் (T3, T5) ராம்பன் மாவட்டத்தில் உள்ளன. இவை தான் ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரை நாட்டின் மற்றும் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.
தற்போது பெய்து வரும் கனமழையால் அவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH44) ஒன்று நிலச்சரிவினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சீரமைக்கும் பணிகள் முடியும் வரை நெடுஞ்சாலை மூடப்பட்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீடியோ:-
Tags: இந்திய செய்திகள்
