Breaking News

பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது Indian National Democratic Inclusive Alliance

அட்மின் மீடியா
0

2024ல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக, கடந்த மாதம் 23 ம் தேதி பீகாரில்  எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்  6 மாநில முதல் மந்திரிகள் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து நேற்று முதல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளார்கள் 

இந்நிலையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் எனவும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் வெளியிடப்படும் என்றும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள டெல்லியில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback