Breaking News

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் நம் முகத்திற்க்கு பதில் அவதார் பயன்படுத்துவது எப்படி? how to use avatar on video call

அட்மின் மீடியா
0

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் நம் முகத்திற்க்கு பதில் அவதார் பயன்படுத்தலாம் என மெட்டா அறிவிப்பு



முகத்தை காட்டாமல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ அழைப்பில் பங்கேற்க நினைப்பவர்களுக்காக, மெட்டா நிறுவனம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இனி அவதார்களைப் பயன்படுத்தி, மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள பயனர்களை அனுமதிப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.வீடியோ அழைப்பில் தங்கள் முகங்களைக் காட்ட விரும்பாதவர்களுக்கு இது பயனுள்ள அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்ஸ்டாகிராமில் அவதார்

இன்ஸ்டாகிராமில் உங்கள் profile பக்கத்திற்கு சென்று, சுயவிவரப் படத்தை கிளிக் செய்யவும். 

பின்னர் 'எடிட் ப்ரொபைல்' என்பதை கிளிக் செய்து, 'கிரியேட் அவதார்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அடுத்து உங்கள் அவதாரை உருவாக்கி கொள்ளுங்கள் அவ்வளவு தான், உங்களுக்கான தனி அவதார் உருவாகி விடும்.

பேஸ்புக்கில் அவதார்

பேஸ்புக்கில்  உங்கள் profile பக்கத்திற்கு சென்று, சுயவிவரப் படத்தை கிளிக் செய்யவும். 

பின்னர் 'எடிட் ப்ரொபைல்' என்பதை கிளிக் செய்து, 'கிரியேட் அவதார்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அடுத்து உங்கள் அவதாரை உருவாக்கி கொள்ளுங்கள் அவ்வளவு தான், உங்களுக்கான தனி அவதார் உருவாகி விடும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback