Breaking News

செங்கல்பட்டு பா.ம.க நகர செயலாளர் வெட்டிக்கொலை நள்ளிரவில் நடந்த பயங்கரம் ! கொலையாளிகளில் ஒருவரை சுட்டு பிடித்த போலிசார் chengalpattu pmk nagaraj murder

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் வய்து 48 இவர் மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். பாமக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு நகர செயலாளராகவும் உள்ளார். 



வழக்கம் போல நேற்று இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜன் அப்படியே சரிந்தார்

இதனையடுத்து, அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback