சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இனி தமிழ் மீடியத்திலும் படிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு CBSE allows Indian languages
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இனி தமிழ் மீடியத்திலும் படிக்கலாம்… அரசு புதிய அறிவிப்பு
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் பயிற்றுவிக்க சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 5ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வியை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகள் NCERT மூலம் முழு நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
