காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றம்!
காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றம்!
கடந்த மாதம் 13-ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதன்பின்பு நீதிமன்ற உத்தரவு படி இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு இதய அறுவை மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்குவர் எனவும் கூறப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
