Breaking News

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

அட்மின் மீடியா
0

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.



அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதால், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனினும், இந்த அறிவிப்பானை வெளியாவதற்கு முன்பு ஏற்றுமதிக்காக, கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback