Breaking News

ட்விட்டருக்கு போட்டியாக டிவிட்டரை போல் பேஸ்புக் கொண்டு வரும் புதிய சமூக வலைத்தளம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ட்விட்டர் என்ற சமூக வலைதளம் உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இதனை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டுள்ளார்



இந்த நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் புதிய சமூக வலைதளத்தை களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான செயலை வெளியாகும் என்றும் இந்த செயலியின் பெயர் Threads என்றும் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்டு உருவாக்கப்படுகின்றதாகவும் இதனின் சோதனை முயற்சியில் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகின்றது

ஏற்கனவே பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், இதனை ட்விட்டர் போன்று ஒரு செய்தி பகிரும் தளமாக கொண்டு வர புதிய சமூக வலைதளத்தை தொடங்க உள்ளதாக தெரிகிறது.

அதேபோல் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback