Breaking News

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலி ரயில் டிக்கெட் விற்பனை செய்தவர் கைது!! பயணிகள் ஏமாந்தது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளிடம் போலி ரயில் டிக்கெட் விற்பனை செய்த நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்துள்ளார்கள்



கொடுங்கையூரை சோ்ந்த ஜூதேந்திர ஷா வயது 38 ரயில் நிலையத்தில் நிற்க்கும் பயணிகளில் சிலர் பயணசீட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். அப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து உங்களுக்கு சீட்டை கன்ஃபார்ம் பண்ணித் தருகிறேன் எனக்கூறி ஒருவர் மோசடி செய்துள்ளார்.

ஓர் வெள்ளைத் தாளில் பயணியின் பெயா், வயது, ரயிலின் பெயா், சென்றடையும் இடத்தை எழுதி ரயில்வே அதிகாரி போல் சீல் மற்றும் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளாா். இதனை கொண்டு செல்லுங்கள், பயணச்சீட்டு பரிசோதகா் உங்களுக்கு இருக்கை ஒதுக்கி கொடுப்பாா் என்று கடந்த ஓா் ஆண்டாக பயணிகளை ஏமாற்றி வந்துள்ளாா்.

இதற்கான பணத்தை பயணிகளிடம் இருந்து பெற்றுக் கொள்வார்.அந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த துண்டு சீட்டை  காட்டினால் அது செல்லாது போலியானது என ரயிலிலிருந்து இறக்கி விடப்படுவர். 

இது குறித்தான புகாா் ரயில்வே போலீஸாருக்கு வந்ததை அடுத்து தனிப்படை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நோட் பேடு, ரப்பா் ஸ்டாம்பு மற்றும் சீல் உடன் நின்ற ஜூதேந்திர ஷா-வை கைது செய்துள்ளனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback