திருவள்ளுவர், காந்தி படங்கள் மட்டுமே நீதிமன்றங்களில் இருக்கவேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
திருவள்ளுவர், காந்தி படங்கள் மட்டுமே நீதிமன்றங்களில் இருக்கவேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற வளாகங்களில் திருவள்ளுவர், மற்றும் காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இனி இடம்பெறவேண்டும், மற்ற தலைவர்களின் படங்கள் நீக்கப்படவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், கடந்தகால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர, மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையால் நீதிமன்றங்களில் காந்தி, மற்றும் திருவள்ளுவர் ஆகிய இருவர் படம் தவிர மற்ற அனைத்து படங்களும் நீக்கப்பட்டது,
அதில் மிகவும் முக்கியமாக அம்பேத்கர் படம் நீக்கப்பட்டது பல வழக்கறுஞர்களுக்கு அதிர்ச்சியானது
இதனால் பல நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டங்களும், நீதிமன்ற புறக்கணிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது
பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் இடங்களில் அம்பேத்கரின் சிலைகள், படங்கள் இருப்பது எந்த வகையிலும் தவறில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அம்பேத்கர் புகைப்படங்களை அப்புறப்படுத்தும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்