மணிப்பூர் கொடூரம் குற்றவாளியின் வீட்டை தீ வைத்து எரித்த சொந்த கிராம பெண்கள் வீடியோ இணைப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு குக்கி பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த சம்பவத்தி முக்கியகுற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட போலிசார் அவர் பெயர் ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்பதும் போலீசார் தெரிவித்திந்தார்கள்
இளம் பெண்களை நிர்வாணமாக்கிய கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹுயர்ம் ஹெரோடாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தியின் வீட்டை நேற்று கிராம மக்கள் எல்லாரும் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளனர்.பெரும்பாலும் இதில் அதிக பெண்கள் எல்லாரும் சேர்ந்து அந்த குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்
