Breaking News

ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் விரைவு ரயில்..!! காரணம் தெரியுமா

அட்மின் மீடியா
0

வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது மேலும் இந்த ரயில்கள் சென்னையில் உள்ள ICFல் தான் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுமைக்கும் அனுப்பப்படுகிறது. 



வந்தே பாரத் ரயில்கள் தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூர் இடையேவும், சென்னை - கோவை இடையேவும், திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேவும் தலா ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது

இந்நிலையில் நீலநிறம் மற்றும் வெள்ளை கலந்து ஓடிக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்கள் இனி ஆரஞ்சு வண்ணத்தில் கலர் மாற்றப்பட்டுள்ளது,

ஆரஞ்சு வண்ணத்தை ரயிலில் இருபுறமும், கதவுகளுக்கு க்ரே வண்ணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வலம் வரும் வந்தே பாரத் ரயில்களை தூய்மைப்படுத்தும் பணி சற்று சிரமமாக இருப்பதாகவும், அடிக்கடி அழுக்கு படிவதால் இந்த வண்ண மாற்றம் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback