வீடியோ எடுக்கும் போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட கணவன் மனைவி! நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ராபலி பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் சோனார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாந்த்ரா கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்
அங்கு கடலில் சீற்றம் அதிகமாக இருந்தபோதும், முகேஷ்-ஜோதி தம்பதி கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.
அப்போது திடீரென்று மிகப்பெரிய அலை வந்து பாறையில் அமர்ந்திருந்த முகேஷ், ஜோதி ஆகியோரை நிலைகுலைய செய்ததோடு, பாறையில் அமர்ந்திருந்த இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது
மேலும் அருகில் இருந்தவர்கள் முகேஷ் சோனாரை காப்பாற்றி உள்ளார்கள் ஆனால் அவரது மனைவி ஜோதியை காப்பாற்ற முடியவில்லை, மறுநாள் கடற்படையினர் அவரது உடலை மீட்டுள்ளார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
