Breaking News

சென்னை டூ திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை ஒரு மாதம் ரத்து Southern Railway அறிவிப்பு ரத்து ரயில்கள் முழு விவரம் chennai tirupati train cancelled

அட்மின் மீடியா
0

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை 12 ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரேணிகுண்டாவுடன் வரை மட்டுமே செல்லும்.

எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 07658) அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை ரேணிகுண்டா – திருப்பதி இடையே மட்டுமே ரத்து செய்யப்பட்டு, ரேணிகுண்டா வரை இயக்கப்படும். 

திருப்பதி -புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும். 

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். 

சென்னை சென்ட்ரல் – திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16203)  ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி – சாம்ராஜ்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16220)  அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை திருப்பதி – பாகலா இடையே ரத்து செய்யப்பட்டு, ஒரு மாதம் பாகலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருப்பதி – எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 07657) அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை திருப்பதி -ரேணிகுண்டா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ரயில் ரேணிகுண்டாவில் இருந்து புறப்படும்.

திருப்பதி – எம்.ஜி.ஆர். சென்னை  சென்ட்ரல்  தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16204)  ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சாம்ராஜ்நகர் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16219) அடுத்த மாதம் 10- ஆம் தேதி வரை பாகலா – திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணி மற்றும் மாலை 4.35 மணி அளவில் திருப்பதிக்கு செல்லும் ரயில்கள் அடுத்த மாதம்( ஆகஸ்ட்) 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சேவையும் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback