Breaking News

புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் தர்ம அடி கொடுத்த பொது மக்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் மதுபோதையில் காரை ஓட்டி  விபத்து ஏற்படுத்தியவர்களை மடக்கிபிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.



சென்னை மேடவாக்கம் மற்றும் பள்ளிகரணை பகுதியை சேர்ந்த திலீப், அபிஷேக், எபினேசர், ஸ்ரீநாத், சுனில் ஆகிய 5 பேர் தமிழக பதிவெண் கொண்ட கறுப்பு நிற காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு அவர்கள் அளவிற்க்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழு போதையில் நகரப் பகுதிக்கு வந்துள்ளனர்.  அங்கு ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வேகமாகச் வந்த காரை, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீஸார் நிறுத்த முயன்றுள்ளனர். 

கார் நிற்காமல் ஒரு வழிப்பாதையில் எதிரே வந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களை இடித்து தள்ளியவாறு வேகமாகச் சென்றது. 

இதனால் பொதுமக்களும், காவல்துறையினும் காரை துரத்தி சென்றனர். கார் கருவடிக்குப்பம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது காரைப் பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் காரின் கண்ணாடி, கதவுகளை உடைத்து உள்ளிருந்த 5 பேரையும் வெளியில் இழுத்துப் போட்டு உதைத்தனர். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர்,

இது குறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து சென்னை கும்பலை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்தான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Pymanidmk/status/1678721038530621440/video/1

https://twitter.com/Pymanidmk/status/1678721038530621440/video/2

https://twitter.com/Pymanidmk/status/1678721038530621440/video/3

https://twitter.com/Pymanidmk/status/1678721038530621440/video/4

https://twitter.com/Pymanidmk/status/1678720510924926977

Tags: புதுச்சேரி செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback