Breaking News

பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை..!

அட்மின் மீடியா
0

மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback