Breaking News

சர்ச்சை வீடியோ பிரபல நடிகர் கனல் கண்ணன் கைது! Actor Kanal Kannan Arrest

அட்மின் மீடியா
0

சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட புகாரில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்!



தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்து சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பிரிவுகளின் கீழ் கனல் கண்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback