Breaking News

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் Driver cum conductor

அட்மின் மீடியா
0

தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

                                                           

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம், 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம், 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை, 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை, 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி. 

ஆகிய இடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகின்றனர். விழுப்புரம் கோட்டம் நீங்கலாக, மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் உடன் நடத்துனர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் உடன் நடத்துனர் 812 காலி பணியிடங்களை நிரப்புதவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இந்தப் பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

மண்டலம் வாரியான காலியிடங்களின் எண்ணிக்கை:-

கும்பகோணம் – 174

சேலம் – 254

கோயம்புத்தூர் – 60

மதுரை – 136

திருநெல்வேலி – 188

கல்வித் தகுதி :-

டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். 

நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:-

 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:-

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு:-







Give Us Your Feedback