ஆகஸ்ட் 3 ம் தேதி இந்த மாவட்டத்திற்க்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆகஸ்ட் 3 ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் தமிழக அரசின் சார்பில் மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
