Breaking News

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும் முழுவிவரம் puducherry gas subsidy Rs 300

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்


இது குறித்து வெளியிட்டுள்ள அரசானையில்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

புதுச்சேரியில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியாகியுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கவும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்கவும் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சிலிண்டர் மானியத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback