கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பத்தை நிராகரித்தால் 30 நாட்களில் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் முழு விவரம் kalaignar magalir urimai thogai thittam online
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பத்தை நிராகரித்தால் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் முழு விவரம்
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இறுதிபட்டியல்:-
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கைப்பேசியில் விண்ணப்பம் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
ii) நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் நிராகரிப்புக்கான காரணத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கான இணையதள இணைப்பு குறுஞ்செய்தியில் இடம்பெற்று இருக்கும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வெளியிட்ட தமிழக அரசு kalaignar magalir urimai thogai thittam application form
https://www.adminmedia.in/2023/07/kalaignar-magalir-urimai-thogai-thittam_8.html
மேல் முறையீடு:-
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். இதற்கான இணையதளம் முகவரி அறிவிக்கப்படும். இ.சேவை மையங்கள் வழியாக மேல் முறையீடுகளைச் செய்யலாம்.
மேல் முறையீட்டு அலுவலர்;-
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீடு அலுவலராகச் செயல்படுவார்.
மேல் முறையிட்டுச் சரிபார்ப்பு நடைமுறைகள்:-
இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். இம்மேல்முறையீடுகளுக்குக் களஆய்வு தேவைப்பட்டால் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் magalir urimai thogai thittam
https://www.adminmedia.in/2023/07/1000-magalir-urimai-thogai-thittam.html
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய வட்டாட்சியர் அறிக்கை பெற்றுத் தீர்வு செய்ய வேண்டும்.
இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாகச் செய்யப்படும். நேரடியாக மனு பெற்று தீர்வு செய்யக்கூடாது.
மேல்முறையீடு தீர்வு செய்தல் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும்.
மேல் முறையீட்டுக் கால அளவு:-
மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீர்வு செய்யப்படும். மேல் முறையீடு செய்ய கால அளவு நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்கு மிகாமல் இருப்பதை வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வினை அவ்வப்பொழுது நடத்தி விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 46 பக்கள் கொண்ட அரசாணை PDF magalir urimai thogai government order
https://www.adminmedia.in/2023/07/46-pdf-magalir-urimai-thogai-government.html
Tags: தமிழக செய்திகள்