விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்ட வீடியோ என பரவும் செய்தி உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக பலரும் சமூக வலைதளங்களில் டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவரால் சந்திரயான் 3 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்டட வீடியோ என ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆனால் அந்த செய்தி பொய்யானது ஆகும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 10.12.2020 அன்று அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் உள்ள எலான் மஸ்க் உடைய SpaceX ராக்கெட் ஏவுதளத்தில் SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK
