Breaking News

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான 3 ரயில்வே ஊழியர்கள் கைது - சிபிஐ அதிரடி Odisha train accident CBI arrests 3 railway employees

அட்மின் மீடியா
0

ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர்.1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ஒடிசா மாநிலம் பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. அத்துடன் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் சுமார் 293 ற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்



இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

இந்த விபத்துக்கு சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் தான் காரணம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வேத் துறையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டப் பிறகு, ஆய்வுக்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத சில அதிகாரிகளின் அலட்சியத்தையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிக்னல் பணிகளில் குறைபாடுகள் இருந்தாலோ, இரண்டு பாதைகளை இணைக்கும் சுவிட்சுகளில் பிரச்னை இருந்தாலோ அது குறித்து ரயில் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டிருந்தால், ஊழியர்களால் அது சரிசெய்யப்பட்டு விபத்தை தவித்திருக்கலாம் என அருண் குமார் மஹந்தா, அமீர் கான், மற்றும் பப்பு குமார் ஆகிய 3 பேரை கைது செய்திருக்கிறது சிபிஐ. 

இதில் அருண்குமார் பாலசோர் ரயில் நிலைய மூத்த பொறியாளர், அமீர் கான்இளம் பொறியாளர், பப்பு குமார் தொழில்நுட்பவியலாளர் ஆவர்.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று பேரின் செயல்கள்தான் விபத்து நடந்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டிருக்கிறது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback