Breaking News

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது வீடியோ இணைப்பு Chandrayaan 3

அட்மின் மீடியா
0

ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்” அடுத்த 42 நாட்கள் அனைத்து நடவடிக்கைகளுமே முக்கியமானது.  என சோம்நாத், இஸ்ரோ தலைவர் 



ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 

சந்திரயான் 3-ன் அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது. நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார்.

இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஆக.23 அன்று நிலவின் தென் துருவத்தில்  தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. என இஸ்ரோ தலைவர்  சோம்நாத் தெரிவித்துள்ளார்

இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் விண்கலம் வீடியோ

https://twitter.com/erbmjha/status/1679780106422681601

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback