Breaking News

22ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் பிறந்த தினத்தில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும். 

பெரியாழ்வார், ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய இத் திருத்தலத்தில் ஆடிப்பூ தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்காக கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback