Breaking News

அமர்நாத் யாத்திரை சென்ற 21 தமிழ்நாடு பக்தர்கள் பனிமலையில் சிக்கித் தவிப்பு! தமிழக அரசு உதவ கோரிக்கை amarnath yatra

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டிலிருந்து அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பயணிகள் தமிழகம் வர முடியாமல் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டு அமர்நாத் யாத்திரை பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


தமிழகத்திலிருந்து 21 பேர் கடந்த 4 ஆம் தேதி, அமர்நாத் புனித யாத்திரைக்கு புறப்பட்டனர். காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றடைந்த யாத்திரை குழுவினர், பின்னர் அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அமர்நாத் கோயிலுக்கு  நடந்து சென்று பனிலிங்கத்தை தரிசித்தனர். 

 மறுநாள் மீண்டும் பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாதை முடிவிட்டது ஆகையால் அவர்கள் மணி காம்ப் என்ற இடத்தில் உள்ள முகாமில் நான்கு நாட்களாக சிக்கி தவிக்கின்றனர். 

பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஸ்ரீநகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் மணி காம்ப் என்ற முகாம் இடத்தில் நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மாட்டி சிக்கி தவிப்பதாக அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு. விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் - மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்:-

இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழ்நாட்டிற்கு திரும்ப முடியவில்லை என்ற பெற்றோர்களிடமிருந்து மாநில அவசரகால செயல்பாட்டு அன்று கிடைக்கப்பெற்றது. தகவல் மாணவர்களின் மையத்தில் 10.07.2023 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி உடனடியாக இமாச்சல பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறை, இயக்குநர், குலு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொள்ளப்பட்டு மாணவர்களின் நிலைமை குறித்து கேட்டறியப்பட்டது.

இமாச்சல பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறையினர், மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது என்றும், சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும். தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நிலைமை சரியானவுடன் உடனடியாக தங்கள் ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். இதனிடையே இமாச்சலபிரதேச தலைமை காவல்துறை இயக்குநர் மூலமாக அனைத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

11.07.2023 அன்று மாலை 6 மணியளவில் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளதாகவும், குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் இருந்து 4500 வாகனங்கள் சண்டிகருக்கு புறப்பட்டதாகவும் நிலைமை சீரடைந்து உள்ளதாக செய்தி கிடைக்கப்பெற்றது.

மேற்கண்ட 12 கல்லூரி மாணவர்களும் நலமுடன் வந்துள்ளதாகவும் அவர்களின் பெற்றோர் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

12.07.2023 அன்று காலை தொலைக்காட்சி செய்தி மூலமாக, அமர்நாத் பனிலிங்கம் தரிசிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கான பயணம் தடைபட்டுள்ளதாக அறியப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தேசிய பேரிடர் மீட்பு படையின் காவல்துறை துணைத் தலைவர் அவர்களை தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பல்டால் மார்க்கமாக அமர்நாத்திற்கு செல்லும் வழிப்பாதை மூடப்பட்டு இருந்ததாகவும் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வடமாநிலத்தில் நிகழ்ந்து வரும் பேரிடரில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இதுவரை 12 தொலைப்பேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு வடமாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களுடன் தொடர்புகொண்டு தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback