Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20 முதல் தொடங்கும்

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20 முதல் தொடங்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை



கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அப்போது திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டம் வழங்கப்படும் என அறிவித்தது

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 15 ம்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைதொகை 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார் அதன் பின்பு அதற்க்கான வழிகட்டுதல் நெறிமுறைகள் , விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது இந்நிலையில் தற்போது அதற்கான டோக்கன் வரும் 20 ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி அந்த டோக்கனை பெற்று விண்ணப்பத்தை நிரப்பி ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback