Breaking News

கத்தார் நாட்டில் 2 தமிழர்கள் உட்பட 5 பேர் சாலை விபத்தில் பலி முழு விவரம் qatar road accident

அட்மின் மீடியா
0

கத்தார் நாட்டில் உள்ள  அல் கோர் மேம்பாலத்தில் புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த இருவர் தமிழகத்தைச் சேர்ந்த கொல்லத்தை சேர்ந்தவர்களின் நண்பர்கள் என தெரிய வந்துள்ளது


இந்த கோர விபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சக்தி குளங்கரை பகுதியை சேர்ந்த ரோஷின் ஜான் (38), அவரது மனைவி ஆன்சி கோமஸ் (30), அவரது சகோதரர் ஜிஜோ கோமஸ் (34) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரவீன்குமார் சங்கர் (38), அவரது மனைவி நாகலட்சுமி சந்திரசேகரன் (33). ஆகியோரும் உயிரிழந்துள்ளார்கள்

இவர்கள் அனைவரும் சென்ற வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதால், அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்துள்ளது. இதில் இந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விபத்தில் உயிர் பிழைத்த ரோஷின்-ஆன்சி தம்பதியினரின் மகன் அல்கோரில் உள்ள சித்ரா மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback