Breaking News

விளையாட்டு வினையானது நண்பர்களுடன் சேலஞ்ச் 150 மோமோஸ் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர் முழு விவரம் Momo Eating Challenge man died

அட்மின் மீடியா
0

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், நண்பர்களுக்கிடையே நடந்த மோமோ சாப்பிடும் சவாலில் 150 மோமோக்களை சாப்பிட்ட பிபின் குமார் பாஸ்வான் என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்



பீகாரை சேர்ந்த பிபின் குமார் பாஸ்வான் இவருக்கு வயது 23 ஆகும் இவர் அங்குள்ள மொபைல் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகின்றார்

இவர் கடந்த வியாழன் இரவு கடை வேலை முடித்து பஜாரில் தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் பேச்சு வாக்கில் யார் அதிகம் மோமோ சாப்பிடுகின்றார்கள் எம  போட்டியை விளையாட விட முடிவு செய்தனர். 

பிபின் குமார் பாஸ்வான் நண்பர்களின் சவாலை ஏற்று ஒரே நேரத்தில் 150 மோமோக்களை சாப்பிட்டுள்ளார்.அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 

அதன் பின்பு போலீசாருக்கு தகவல் கொடுத்து  வரவழைக்கப்பட்டு பசுவானின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாஸ்வானின் தந்தை, தனது மகனின் நண்பர்கள்  வேண்டுமென்றே மோமோ சாப்பிடும் சவாலை சொன்னதாகவும், அதில் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முழு விவரம் தெரியவரும், ஆனால் முதல் கட்ட தகவலில் உடலில் விஷம் ஏதும் இல்லை என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்

விளையாட்டாக மோமோ சாப்பிட்டு பரிதாபமாக பாஸ்வான் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback