முதியோர், மற்றும் விதவை உதவித்தொகையை 1200 ஆக உயர்வு
அட்மின் மீடியா
0
முதியோர் உதவித்தொகை 1200ஆக உயர்ந்ததாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டம் முடிந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,
முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகையானது 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உயர்த்தப்பட்ட இந்த திட்டதிற்கு கூடுதலாக 845.91 லட்சம் அரசுக்கு செலவாகும் என குறிப்பிட்டார்.
Tags: தமிழக செய்திகள்
