தீபாவளிக்கு சொந்த ஊர் போக போறீங்களா ஜூலை 12 முதல் ரயில் முன்பதிவு தொடக்கம்!!
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவு ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதன் காரணமாக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
அந்த வகையில் இந்திய ரயில்வே 120 நாட்களுக்கு முன்னதாகவே பயண சீட்டை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி வருகிற 12ம் முதல் தொடங்குகிறது
நவம்பர் 9ம் தேதி வெளியூர் செல்லும் நபர்கள் ஜூலை 12ஆம் தேதியும் ,
நவம்பர் 10ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ஆம் தேதியும்,
நவம்பர் 11ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 14ஆம் தேதியும் ,
நவம்பர் 12ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 15ஆம் தேதியும் ரயில்களில்முன்பதிவு செய்து கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்
