Breaking News

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28ம் தேதி வெளியிடப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

11-ஆம் வகுப்பு ஜூன் மாதம் துணைத்தேர்வெழுதிய மாணவ மாணவிகளுக்கு  ஜூலை 28ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பில், 2023 ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்.தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback