Breaking News

1021 அரசு மருத்துவர் பணி நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்று பணிநியமனத்திற்கு காத்திருப்போர்களுக்கு நியமன ஆணை வழங்க தடை விதித்து சென்னை உயநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என  மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழகத்தில் காலியாக இருந்த 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வை நடத்தியது 

இதனை எதிர்த்து மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள் அந்த வழக்கை விசாரித்தத்த நீதிமன்றம் தேர்வு முடிந்து பணி ஆணை வழங்குவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் 300 நாட்கள் பணிபுரிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதது குறித்து தமிழக அரசும், மருத்துவக்கல்வி இயக்குநரகமும் விளக்கம் அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback