Breaking News

கபர்ஸ்தானில் இயக்கும் டீ கடை வைரல் வீடியோ lucky tea stall ahmedabad

அட்மின் மீடியா
0

குஜராத் மாநிலம், அஹமாதாபாத் நகரில் உள்ள லால் தர்வாஜா என்னும் பகுதியில் 72 ஆண்டுகளாக இயங்கி வரும் லக்கி டீஸ்டால் பற்றி விரிவாக பார்ப்போம்



லக்கி டீஸ்டால்:-

கபர்ஸ்தான் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் கை வண்டியாகத் தொடங்கிய வியாபாரம் வளர்ந்தது, கல்லறை மற்றும் மரத்தை சுற்றி வளர ஆரம்பித்த கடை. 

மரத்தடியை சுற்றி மேசைகள் அமைக்கப்பட்டு, கல்லறைகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து நடக்க பாதை அமைத்து முஸ்லீம் கல்லறையில் கட்டப்பட்ட ஒரு உணவகம் ஆகும்

அங்கு மசூதியுடன் இணைக்கப்பட்ட 'கப்ரிஸ்தான்' (கல்லறை) சூஃபி துறவிகளின் கல்லறைகள் ஆகும்

மேலும் டீகடை உரிமையாளர் ஒவ்வொரு நாளும் புதிய ஊதுபத்தி ஏற்றி, கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, அவற்றை சுத்தமாகவும்,  வைத்திருக்கிறார்கள்

கடையில் “உயிரோடு உள்ளவர்களை மதிப்பதைப் போலவே, இறந்தவர்களையும் மதிப்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்

கல்லறைகள்:-

இங்கு 26 கல்லறைகள் உள்ளன மேலும் அந்த கல்லறைகள் 400-500 ஆண்டுகள் பழமையானதாகும்

மேலும் டீகடை உரிமையாளர் ஒவ்வொரு நாளும் புதிய ஊதுபத்தி ஏற்றி, கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, அவற்றை சுத்தமாகவும்,  வைத்திருக்கிறார்கள்

ஓவியர்  எம்.எப் ஹுசைன்:-

பிரபல ஓவியர்  எம்.எப் ஹுசைன் சாஹிப் ஊருக்கு வரும்போதெல்லாம், அவர் கண்டிப்பாக இந்த டீக்கடையில் டீ சாப்பிட வருவார். மேலும் ஹுசைன் தனது ஓவியங்களில் ஒன்றை 1994 இல் கடையின் உரிமையாளரான கே.எச்.முகமதுபாய்க்கு பரிசாக வழங்கப்பட்டது. 

அந்த ஓவியத்தில் இரண்டு ஒட்டகங்கள் பின்புறத்தில் ஒரு கோட்டை போன்ற கட்டுமானம் மற்றும் பின்னணியில் ஒரு பாலைவனம் உள்ளது மேலும் அதில் ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார், அவரே அல்லாஹ், முகமது அவருடைய தீர்க்கதரிசி என அதில் எழுதப்பட்டுள்ளது

லக்கி டீ ஸ்டால்  பிரபலமாகி நகரத்தில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக மாறியது என பதிவிட்டுள்ளார்

லக்கி டீஸ்டால் வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=4j_N-1bii7I

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback