போன் சைலன்ட் மோடில் இருக்கு எங்க வைத்தோம் என தெரியல!! கண்டுபிடிப்பது எப்படி find my device tamil
அட்மின் மீடியா
0
தற்போது பலரும் தங்கள் மொபைல் போனை சைலண்ட் மோடில் வைக்கின்றார்கள் , அப்படி சைலண்ட் மோடில் இருக்கும் போது நாம் மொபைல் வைத்த இடம் தெரிமால் தேடி கொண்டு இருப்போம், போன் செய்தாலும் பலன் இருக்காது, உங்கள் மொபைலை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம், அப்படி பட்ட சூழ்நிலையை சமாளிக்க தீர்வு உள்ளது.
ஆம் உங்கள் மோன் சைலண்ட் மோடில் இருந்தாலும் நீங்கள் அதில் ரிங் செய்தால் சத்தம் வரும் போனை ஈசியா கண்டுபிடிக்கலாம்
Find My Device என்கின்ற அப்ளிகேஷன் கண்டிப்பாக உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். உங்கள் மொபைலை காணவில்லை என்றால் இதன் மூலமாக மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்
தற்போது அனைத்து வகை மொபைல் போனிலும் find my device ஆப் உள்ளது ஒருவேளை இல்லை என்றால் நீங்கள் பிளே ஸ்டோர் சென்று find my device என்ற மொபைல் ஆப்பிப்னை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் செல்போனின் செட்டிங்க்ஸில், லொகேஷன் லொகேஷன் ஆன் செய்து கொள்ளுங்கள்
அடுத்து பைன்ட் மை டிவைஸ் ஆப் சென்று உங்கள் இமெயில் ஜடி பதிவிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
Find My Device சிறப்பம்சங்கள்:-
மொபைல் எப்பொழுது கடைசியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்
அந்த மொபைல் மாடல், மொபைலில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை காட்டும்.
மேலும் எந்த பகுதியில் மொபைல் உள்ளது. அது செயல்பாட்டில் உள்ளதா என்பது போன்ற தகவல்களை வழங்குகிறது.
போனின் இருப்பிடத்தை வரைபடத்தில் காண்பிக்கும். இதன் மூலமாக தொலைந்து மொபைல் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று பக்கத்தில் உங்கள் மொபைலில் தொலைத்திருந்தால் பிளே சவுண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் போனை ஐந்து நிமிடங்கள் இடைவிடாது ரிங் செய்ய செய்யலாம்.
இது உங்கள் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் வேலை செய்யும்.
அதேபோன்று தொலைந்து போன மொபைல் இருக்கும் அனைத்து தரவுகளையும் அழிக்க வேண்டுமென்றால் Erase Device என்கின்ற அம்சத்தை தேர்வுசெய்து போனில் உள்ள அனைத்தையும் அழிக்கலாம்
குறிப்பு:-
இண்டர் நெட் அவசியமாகும் இண்டர் நெட் இல்லை என்றால் கண்டு பிடிக்கமுடியாது
அதேபோல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்படாது.
Tags: தொழில்நுட்பம்