Breaking News

கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் மகளிர் ஆணைய தலைவி குமாரி

அட்மின் மீடியா
0

கல்லூரி மாணவிகள் DP-யில் தங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பில் மகளிர் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், மகளிர் ஆணையத் தலைவி குமாரி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குமாரி அவர்கள்



மகளிர் ஆணையத் தலைவியாக என்னை முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் நியமித்த நாள் முதல் நிறைய விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய பிரச்சனை சைபர் கிரைம். குறிப்பாக, பெண்கள் சமூக வலைதளங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் கருணாநிதி இவர்களெல்லாம் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர்களெல்லாம் எங்களுக்காக போராடிய தலைவர்கள். பெண்களுக்கான சொத்து உரிமை எனப் பல சட்டங்களை கூறலாம். இதைப் பற்றியெல்லாம் கல்லூரி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்."கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். அந்தப் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள்; டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி ஆள வேண்டும் என்பது முக்கியம். அதை மாணவிகளுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறோம்." எனத் தெரிவித்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback