Breaking News

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு ஆளுநர் தரப்பில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டுந்தார்  



செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். 

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- Minister Thiru V.Senthil Balaji is facing serious criminal proceedings in a number of cases of corruption including taking cash for jobs and money laundering. Abusing his position as a Minister, he has been influencing the investigation and obstructing the due process of law and justice. Currently he is in judicial custody in a criminal case being investigated by the Enforcement Directorate. Some more criminal cases against him under Prevention of Corruption Act and the Indian Penal Code are being investigated by the State Police. There are reasonable apprehensions that continuation of Thiru V.Senthil Balaji in the Council of Ministers will adversely impact the due process of law including fair investigation that may eventually lead to breakdown of the Constitutional machinery in the State. Under these circumstances, Hon'ble Governor has dismissed Thiru V.Senthil Balaji from the Council of Ministers with immediate effect. இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக எழுதிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. 

அந்த கடிதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜியின் நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது

செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது  மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் கூறிப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback