Breaking News

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு நீர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2023-2024 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனமருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோன்று தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் என்-ஆர்.ஐ. இடஒதுக்கீட்டு இடங்களுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை 

www.tnhealth.tn.gov.in 

https://tnmedicalselection.net/


நீட் தேர்வில் வென்று விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். 

சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவரக்ள் எளிதாக விரும்பும் அரசு கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் இருந்தன. இந்தாண்டு எத்தனைஇடங்கள் என்பது அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரியவரும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback