Breaking News

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை..! ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்

அட்மின் மீடியா
0

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியை கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.



சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 

தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோருக்கு  கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தக்காளியை பதுக்கும்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 

கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்குமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback