Breaking News

ரோந்து பணியின் போது இரவில் கடையில் ஓசியில் பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு - 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் படப்பையில் இலவசமாக ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லேட் கேட்ட  4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த 04ம் தேதி இரவுப் பணிக்காக ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் ஆகியோருடன் படப்பை பகுதிக்குச் சென்றிருந்தார். அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பாஷா என்பவரின் கடைக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த ஊழியரிடம் தர்பூசணி கூல்ட்ரிங்ஸ், டீ, கமர்கட் மிட்டாயை வாங்கியிருக்கிறார்கள். 

அந்தக் கடையில் வேலை பார்த்தவர், வடமாநிலத் தொழிலாளி என்பதால் அவருக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை.பின்னர் போலீஸார், கூல்ட்ரிங்க்ஸ், டீ உள்ளிட்டவைகளுக்குப் பணம் கொடுக்காமல் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணையில் ஈடுபட்டார். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றம் உறுதியானதையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/PTTVOnlineNews/status/1666348895201562624

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback