Breaking News

110 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 5 பேர் பலி நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கடலில் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.



டைட்டானிக் கப்பல் விபத்து:-

1912 ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் முழ்கியது அந்த கோர விபத்தில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்

அதன்பின்பு கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பலை கண்டுபிடிக்கமுடியாமல் அப்படியே கைவிடப்பட்டது ஆனால் 1985ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார்  12,500 அடி ஆழத்தில் அந்த டைட்டானிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது

ஆனால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். 

டைட்டன் சுற்றுலா:-

ஆழ்கடலில் இருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட அமெரிக்காவை சேர்ந்த ஓசன்கேட் என்ற தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது.

இந்த நீர்முழ்கி கப்பல் கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறன் படைத்தது. 

இந்த நீர்முழ்கி கப்பல்  21 அடி நீளம் ஆகும் 

இதில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 

இந்த சுற்றுலாவிற்க்கு செல்ல ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம்.

விபத்து:-

இந்த நீர்மூழ்கி கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த 18ம் தேதி புறப்பட்டது. நீர்முழ்கி கப்பலை பைலட் ஸ்டாக்டன் ரஷ் இயக்கினார். 

கடலுக்கு அடியில் சுமார் 4 கி.மீ சென்ற நிலையில் நீர்மூழ்கிக்கும், கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டிருந்த போலார் பிரின்ஸ் என்ற கப்பலுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த நீா்மூழ்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவில்லை.

இந்த நீர்மூழ்கியில் 4 நாள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்தது

இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்க  மற்றும் கனடா கடலோரக்காவல்படை தீவிரமாக ஈடுபட்டது,

இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கிக்கப்பல் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டார்கள் என  அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது

வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்கள் யார்? யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். 

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலைமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் நீர்முழ்கி கப்பல் பைலட்

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

விபத்து குறித்து:-

அமேரிக்க கடலோர பாதுகாப்பு  அறிக்கையில்  கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய நீர்முழ்கி கப்பலில் பாகங்கள் கிடைத்துள்ளது, மேலும் அதில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் ஒருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகின்றது இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டு கொண்டுவரப்படும் என அமெரிக்க கடலோரக்காவல்படை  தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback