Breaking News

கொரானாவை விட கொடிய வைரஸ் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை WHO warns disease x

அட்மின் மீடியா
0

கொரானாவை விட கொடிய பெருந்தொற்றை சந்திக்க நேரிடும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் 

கரோனா வைரஸின் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இதன் மூலம் கரோனா வைரஸின் சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மேலும் ஒரு பெருந்தொற்று உருவாகி வருகிறது. 

இந்த பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் சர்வதேச அளவில் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிவது அவசியம். குறிப்பாக அடுத்த தொற்று நோய் பரவும்போது, அதை கூட்டாக எதிர்த்துப் போரிட நாம் தயாராக இருக்க வேண்டும். 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்து காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.

பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது.

இந்நிலையில் அடுத்த பெருந் தொற்றுக்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ளார் அடுத்த பெருந்தொற்று கரோனா வைரஸை விட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த நோய்களில் எபோலா, சார்ஸ், ஜிகா வைரஸ் ஆகியவை இடம் பெற்று இருந்தன இறுதியாக பட்டியலில் 'Disease X' என குறிப்பிடபட்டுள்ளது 

தொடர்ச்சியான பெருந்தொற்றுக்கள் நோய்க்கிருமிகள் மூலம் ஏற்படக்கூடும் எனவும் தற்போது மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதாக தெரியவில்லை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு புதுவகையான வைரஸ், பாக்டீரியா, அல்லது பூஞ்சை என்பதாக கூட இருக்கலாம். சிகிச்சை முறைகள் எதுவும் அறிந்திடாத ஒன்றாக இருக்கும் என்று சொல்லபப்ட்டுள்ளது. 

அதாவது Disease 'X' ஆனது விலங்குகளிடம் பரவக்கூடிய தொற்று நோயாகும். இந்த Disease 'X' ஆனது அடுத்து நோய் தொற்றாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback