Breaking News

மணிப்பூர் கலவரம் காரணம் என்ன? போரட்டகாரர்களை கண்டதும் சுட உத்தரவு, கலவர வீடியோ இணைப்பு முழு விவரம் manipur violence tamil

அட்மின் மீடியா
0

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதுடன் வீடுகள், கட்டிடங்களுக்கும் தீ வைத்து வருகின்றனர். 

ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மணிப்பூர்:-

மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் தலை நகரம் இம்பால் ஆகும். மணிப்பூர் வடக்கில் நாகலாந்து ,தெற்க்கில் மிஸோரம், மேற்க்கில் அஸ்ஸாம் கிழக்கில் மியன்மாருக்கு நடுவில் உள்ளது 

மணிப்பூரை பொறுத்தவரையில் அங்கு எண்ணிக்கையின் அளவில் மிக பெரிய சமூகமாக இருப்பது மைத்தி சமூகம் இவர்கள் மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர்  1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்பு 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.

ம்ணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளது,தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகின்றது

பிரச்சனை:-

மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தினரை சேர்க்க இணைக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை

அதே சமயம் மைத்தி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றார்கள்

இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மைத்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.

பேரணி:-

இந்நிலையில் எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மைத்தி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் ம்ாநிலத்தில் 10 இடங்களில் ‘ஒற்றுமை அணிவகுப்பு நடத்தப்பட்டது அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வன்முறை:-

அப்போது பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. 

இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.

கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகரமே தீப்பிடித்து எரிந்தது.

இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மணிப்பூர் அரசும் மாநிலத்தில் நிலையை கட்டுப்படுத்த இணைய வசதியை நிறுத்திyஉள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது

போராட்டகாரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப் பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

பாதிப்பு:-

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மணிப்பூர் கலவரத்தில் ஏராளமான வீடுகள் தீக்கு இரையாகியுள்ளன.

இநத வன்முறையால் சுராசந்த்பூர், மலை மாவட்டம் மற்றும் அண்டை பள்ளத்தாக்கு மாவட்டமான பிஷ்னுபூரின் சில பகுதிகளில் தீவைப்பு மற்றும் கல் எறிதல் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகியுள்ளன. 

பல வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் மோதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சேதம் நிலவரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரிகோம்:-

இந்த சம்பவம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தனது ட்விட்டரில் 

தயவு செய்துஉதவுங்கள், எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ashoswai/status/1653769168401866752

https://twitter.com/PAPA__Tweets/status/1654072803694624770

https://twitter.com/ashoswai/status/1654141620130914305

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback