Breaking News

டீக்கடையில் டீகுடிக்கும்போது சட்டை பையில் திடிரென வெடித்த செல்போன் உயிர்தப்பிய முதியவர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ cellphone blast kerala

அட்மின் மீடியா
0

டீக்கடையில் அமர்ந்திருந்த முதியவர் சட்டை பையில் திடிரென வெடித்த செல்போன் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

கேரள மாநிலம் திருச்சூரில் 70 வயது முதியவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்த சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் எலியாஸ். 70 வயதான இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த கைப்பேசி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் துரிதமாக செயல்பட்ட அந்த முதியவர் சட்டைப் பையில் இருந்து கைப்பேசியை எடுத்துக் கீழே போடுகிறார். அந்தக் கடையில் உள்ள மற்றொரு நபர் அந்த கைப்பேசியின் மீது தண்ணீரை ஊற்றி அணைப்பதாக பதிவாகியுள்ளது.இதனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல கடந்த வாரத்தில், கேரளத்தில் ஜீன்ஸ்பேண்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. 

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8 வயது சிறுமி கைப்பேசி வெடித்து கேரளத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/AJITH__AFC/status/1659376899888668672

மொபைல் போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் முழு விவரம் useful tips to prevent smartphone explosion

https://www.adminmedia.in/2023/04/useful-tips-to-prevent-smartphone.html

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback