Breaking News

மொபைல் போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் முழு விவரம் useful tips to prevent smartphone explosion

அட்மின் மீடியா
0

மொபைல் வெடிக்க காரணம் அதன் பேட்டரி தான் பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது.

 


ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடுகின்றன அந்தத் திறனுக்கு ஏற்றவாறு  சார்ஜர்களேபோனுடன் வழங்கப்படுகின்றன. அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது பேட்டரிக்க்கு ஏதும் ஆகாது

ஆனால் குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு அதிக வோல்ட் கொண்ட சார்ஜரை பயன்படுத்து போது அந்த பேட்டரி பருமன் அடைகிறது.ஒரு நாள் உங்கள் போன் எந்நேரத்திலும் வெடித்து சிதறும். அதனால் இனிமேல் உங்கள் போனுக்கு சரியான சார்ஜரை பயன்படுத்துங்கள்

புதிதாக கைபேசி வாங்கும் பொழுது கொடுக்கப்பட்ட சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும். சந்தையில் கிடைக்கும் ஏதோ ஒரு சார்ஜரை வாங்கி உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் அதில் மின் பகிர்மான அளவுகளின் மாறுதல் மற்றும் குறைந்த தரம் போன்றவற்றால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டால் சார்ஜர் மூலமாக மொபைல் வெடிக்க வாய்ப்புகள் அதிகம்

பேட்டரி  வீங்கிவிட்டால் பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது.

இப்போது வரும் செல்போன்களில் பேட்டரி இம்பிள்ட்டாகவே வருகிறது. அதனால் அது வீங்குவது தெரிவதில்லை.

இரவு நேரங்களில் சார்ஜ் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் தவறை செய்ய கூடாது.

நீண்ட நேரம் சார்ஜ் ஆகும் போது லித்தியம் அயன் பேட்டரி வெப்பமடைந்து செல்போன் வெடிக்கும். 

சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். 

செல்போன் நிறுவனம் வழங்கும் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள்.

பேட்டரி முழு அளவு சார்ஜ் ஏறிய பின்னரும் தொடர்ந்து மின் இணைப்பில் பலமணிநேரம் இருப்பது 

அதிகநேரம் மொபைல் பயன்படுத்தி சூடாக இருக்கும் பொழுது உடனே மொபைலுக்கு சார்ஜ் போகக்கூடாது.

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகிப்பதால் உங்கள் செல்போனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதன்மூலம் பேட்டரியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்று, திடீரென்று வெடித்து சிதறும். இதனால் சார்ஜ் போட்டு செல்போனை உபயோகப்படுத்தும் தவறை மட்டும் செய்யாதீர்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback