Breaking செப். 30 ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு RBI withdraws ₹2000 note
தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது
நாட்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=55707
Tags: இந்திய செய்திகள்