Breaking News

உங்கள் போனின் மைக்கை உங்களுக்கு தெரியாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றது வாட்ஸ் ஆப் மீது குற்றச்சாட்டு…தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை

அட்மின் மீடியா
0

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள வாட்ஸ் ஆப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, வாட்ஸப் தன் பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக்கை பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ளது



வாட்ஸ்டஅப் செயலியை பேஸ்புக் வாங்கிய சமீப காலங்களாகவே பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்குப் பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது

குற்றச்சாட்டு:-

ட்விட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக பணியாற்றும் ஃபோட் டாபிரி. தான் உறங்கும்போது தனது மொபைல் போனில் உள்ள மைக்ரோஃபோனை ரகசியமாக வாட்ஸ்-ஆப் பயன்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினாா். 

மேலும் அதுதொடா்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் போட் டாபிரி 

அந்த புகைப்படத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிஅவரை அவர் தூங்கிக் கொண்டிருந்தத போது அவரின் கைப்பேசி மைக்ரோஃபோனை வாட்ஸ்-ஆப் ரகசியமாக அணுகி, அதனை பல்வேறு நேரங்களில் பயன்படுத்தியுள்ளது அந்தப் புகைப்படத்தில் தெரிகிறது.


ட்விட்டர் நிறுவன பொறியியல் பிரிவு இயக்குநரான ஃபோட் டபிரி தனது ட்விட்டரில் 

நான் காலையில் 6 மணிக்குத் தான் எழுந்தேன். ஆனால் அதற்கு முன்பு இருந்தே அவர்கள் மைக்கை பயன்படுத்துகிறார்கள். இங்கே என்ன நடக்கிறது எனப் புரியவில்லை

இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் வரை மொபைலில் உள்ள மைக்ரோஃபோனை வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகிறது என்று அவர்  பதிவிட்டுள்ளார்

வாட்ஸ் ஆப் விளக்கம்:-

பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். 

இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்,

மைக் செட்டிங்கை பொறுத்தவரைப் பயனாளர்கள் கையில் தான் முழு கட்டுப்பாடும் இருக்கிறது என்றும் ஆண்ட்ராய்டில் உள்ள பிழையே இதற்குக் காரணம் இதுகுறித்து விசாரித்து சரிசெய்யுமாறு கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று  WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விசாரணை:-

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு அந்தரங்க அத்துமீறலாகும். இதனை ஏற்க முடியாது.

குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் விரிவான தரவு பாதுகாப்பு மசோதா இன்னும் இல்லை என்ற போதிலும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் செக் செய்வது எப்படி:-

முதலில் உங்கள் மொபைல் போனில் செட்டிங் செல்லுங்கள்

அடுத்து அதில் உள்ள ஆப்ஸ் செட்டிங் என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் வாட்ஸப் என்பதை கிளிக் செய்து அதில் கேமரா, மைக், காண்டாக்ட் மீடியா எது வேண்டுமோ அதை பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்

அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback