Breaking News

கடைகளில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வியாபாரிகள் வாங்க கூடாது – மத்திய அரசு

அட்மின் மீடியா
0

ஷாப்பிங் மால்கள், சூப்பர்மார்க்கெட் போன்ற கடைகளில் பொருள்களை வாங்கி பில் போடும் போது அங்கு வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்கி பதிவு செய்யும் முறை பின்பற்றப்படுகிறது.

இந்த கடைகள் தங்களின் ஆபர்கள், ஷாப்பிங் பாயின்ட்ஸ், சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்களிடம் கூறுவதற்காக தான் செல்போன் எண்ணை வாங்குவதாகக் கூறுகின்றனர்.

செல்போன் எண் என்பது நமது தனிப்பட்ட பிரைவசியை உள்ளடக்கியது என்பதாலும் மொபைல் எண்ணை கேட்பது சரியல்ல இதனால் பல சைபர் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது

இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் செய்தியாளர்களிடம் 

வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சில வியாபாரிகள் கூறுகின்றனர். 

இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாமற்ற செயல். இப்படி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்கி சேகரிப்பதில் பிரைவசி குறித்த ஐயமும் உள்ளது

எனவே, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ரீடெயில் வியாபாரிகள் அவர்களின் மொபைல் எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback