Breaking News

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை கல்லூரிகளின் பட்டியல் ..list of government arts and science colleges in tamilnadu

அட்மின் மீடியா
0

  தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பித்துள்ளது

 

மாணவ மாணவிகள் www.tngasa.in மற்றும் www.tngasa.org  என்ற இணையதள முகவரிகளில் 19.05.2023 ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024 விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரம்

(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/- பதிவுக் கட்டணம் - ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 08/05/2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நோடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்

08.05.2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்

19.05.2023

தொடர்பு எண் : 1800 425 0110

தமிழகத்தில் உள்ள 163 கல்லூரிகளின் பட்டியல் பார்க்க

 

 பட்டியல் விவரம்

https://www.tngasa.in/images/college-List.pdf

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback